NEWS

6/recent/ticker-posts

WHATSAPP-ல் புதிய வசதி அறிமுகமானது-முழு விவரங்கள்

வாட்ஸ் அப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு முறை பார்த்த பிறகு மறைந்து போகும் புதிய வசதி தற்போது வாட்ஸ் அப்பில் அறிமுகமானது.


வாட்ஸ் அப்பில் VIEW ONCE என்ற பெயர் கொண்டு இருக்கும் இந்த புதிய வசதி தற்போது அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்அப் பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். வாட்ஸ் அப்பில் வழக்கமாக புகைப்படங்கள் வீடியோக்கள் அனுப்பும் முறையில் எந்தவித மாறுதலும் இல்லை. ஆனால் ஒருவருக்கு இமேஜ் மற்றும் வீடியோக்களை அனுப்பும்பது கீழே இடது பக்கத்தில் 1 என்கிற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை கிளிக் செய்தால் போதும் புகைப்படம் மற்றும் வீடியோவை பெறுபவர் அதை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் ஒருமுறை பார்த்ததும் அது தானாகவே மறைந்துவிடும்.


மேலும் இப்படி பெறப்படும் புகைப்படங்கள் பயனாளர்களின் மெமரியில் சேமிக்கப் பட மாட்டாது மேலும் இந்த ஒரு முறை பார்க்க கூடிய புகைப்படங்கள் வீடியோக்களை யாருக்கும் அனுப்புவோ மொபைலில் சேமிக்கவோ முடியாது.

மேலும் அனுப்பப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் 14 நாட்கள் பார்க்காமல் வைத்திருந்தாள் அதன் பின் தானாக அழிந்து விடும். ஆனால் உங்கள் செய்திகளை ஒட்டுமொத்தமாக சேமித்து வைக்கும் போது இந்த புகைப்படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் சேமித்து வைத்து செய்திகளை மீட்கும் போது மீண்டும் இதை பார்க்கலாம். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments