மிஸ்டு கால் மூலமாக சமையல் கேஸ் சிலிண்டர் பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமையல் காஸ் சிலிண்டர்கள் தற்போது மொபைல் போனில் வாய்ஸ் கால் வழியாக பதிவு செய்யப்படுகின்றன ஆனால் தற்போது இதில் வயதானவர்களுக்கும் கிராமங்களில் உள்ளவர்களுக்கும் சிரமம் இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்து சிலிண்டர் பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனி கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்கு 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் இனி ஈஸியாக சிலிண்டர் பதிவு செய்ய முடியும் நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் ஈசியாக சிலிண்டர் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.
0 Comments