உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் இந்த சூழ்நிலையில் நாளை முதல் அதாவது புத்தாண்டு தொடங்கும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Os 4.0.3 புதிய ஐபோன் ஐஓஎஸ் மற்றும் கேஏஐஒஎஸ்-2.5.1, ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 உள்ளிட்ட செல்போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும். எனவே இந்த செல்போன்களை பயன்படுத்தும்படி பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த போன்களை வைத்திருப்பவர்கள் வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்து செல்போன் எண்ணை பதிவு செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 9 என்ற மென்பொருள் இல்லாத செல்போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஐபோன் 4 உட்பட அதற்கு முன்பாக உள்ள அனைத்து ஐபோன் மாடல்களிலும் இந்த வாட்ஸ் அப் செயலி செயல்படாது எனவும் தெரிவித்துள்ளது.
ஐபோன் 4s ,ஐபோன் 5, ஐபோன் 5s ,ஐபோன் 5c, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகிய செல்போன்களில் வாட்ஸ்அப் அப்டேட் செய்து பயன்படுத்தலாம் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments