முதலில் வருவது செயலற்ற வங்கிக்கணக்கு. தொடர்ந்து 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எந்த பரிமாற்றமும் நடக்காத வங்கிக்கணக்குகள், செயலற்ற வங்கிக்கணக்குகள் ஆகும்.விஷமிகள் மோசடி நடவடிக்கைகளுக்கு இத்தகைய வங்கிக்கணக்குக ளையே குறிவைக்கிறார்கள். எனவே, வாடிக்கையாளர்களையும் வங்கித்துறையின் நேர்மையையும் பாதுகாக்க இத்தகைய கணக் குகளை மூட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இரண்டாவது, செயல்படாத வங்கிக்கணக்கு. கடந்த 12 மாதங் கள் அல்லது அதற்கு மேல் எந்த பரிமாற்றமும் நடக்காதவை செயல்படாத வங்கிக்கணக்குகள் ஆகும். 12 மாதங்களாக எந்த பரிமாற்றமும் செய்யாத வாடிக்கையாளர்கள், வங்கிக்கிளையை தொடர்புகொண்டு, தங்கள் கணக்கை மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகளுக்கு தேவையற்ற சுமையை குறைக்கவும், ஆன்லைன் மோசடிக்கான ஆபத்தை குறைக்கவும் இத்தகைய கணக்குகள் மூடப்படுகின்றன.
மூன்றாவது, பூஜ்ய பேலன்ஸ் கணக்கு. நீண்ட காலமாக பூஜ்ய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக்கணக்குகள் மூடப்பட லாம். தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், மோசடி ஆபத்தை குறைக்கவும் இத்தகைய வங்கிக்கணக்குகள் மூட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk