NEWS

6/recent/ticker-posts

BREAKING NEWS: தமிழக முதலமைச்சர் இன்று 110-விதியின் கீழ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்-முழு விவரங்கள்

அரசுப் பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது அறிக்கை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக, அவர்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கும் தோழனாக என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அரசுகள் அறிவித்து செயல்படுத்திய, அரசு ஊழியர்களுக்கான நலத் திட்டங்கள் எண்ணற்றவை; இந்த நாட்டிற்கே வழிகாட்டுபவை.

அந்த வகையில், அண்மையில், பல்வேறு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களைச் சார்ந்த சங்கப் பிரதிநிதிகள் அரசிடம் வைத்த கோரிக்கைகளையெல்லாம் பரிசீலித்து, பின்வரும் முக்கிய அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன்.

(1) அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து, நிதிநிலை அறிக்கையில் 1-4-2022 முதல் அமல்படுத்தப்படும் என் அறிவிக்கப்பட்டிருந்தது. வரப்பெற்ற அரசு ஊழியர்கள் சங்கங்களின் இதுகுறித்து கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்து, இந்த அரசுக்குக் கடும் நெருக்கடியான நிதிச் சூழல் இருப்பினும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாதகாலத்திற்கு
முன்னதாகவே. அதாவது, 1-1-2022 முதல், அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) 16 இலட்சம் அரசு இதன்மூலம் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்னரே, அகவிலைப்படி உயர்வினை அமல்படுத்துவதால், மூன்று மாத காலத்திற்குக் கூடுதலாக ஆயிரத்து 620 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். ஆண்டொன்றுக்கு கூடுதலாக 6 ஆயிரத்து 480 கோடி ரூபாய் செலவாகும்.

2) சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவுச் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆசு உயர்த்தப்படும். இதன்மூலம் தற்போது பணியிலிருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்கள்.

(3) அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக் காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020 ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதியின்மூலம் அவர்களுடைய பணித்திறன் மற்றும் அவர்களது செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, உயர் கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத் தொகை, ஒன்றிய அரசால் அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும்.

முழு விவரங்கள்-CLICK HERE

Post a Comment

0 Comments