NEWS

6/recent/ticker-posts

FLASH NEWS: இந்த மாவட்டத்தில் 15 நாட்களுக்கு புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 46 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டுபிடிக்கபட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதன் விவரங்கள்:

கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிந்து சிகிச்சை அளிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசால் ஊரடங்கு 31-10-2021 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக கட்டுப்பாடுகள் 1-9-2021 முதல் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் 17 -09- 2021 முதல் கீழ்க்கண்ட தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.


கட்டுப்பாடுகள் பற்றிய முழு விவரங்கள்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள்,பால், மருத்துவம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள்/ சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் அடுமனைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள் திரையரங்குகள் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி மற்றும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப் படுகிறது. மேலும் உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகள் உடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து வாரசந்தை களுக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி அனுமதிக்கப்படுகிறது. மேற்படி சந்தைகளில் வெளிமாவட்ட/ மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை சார் ஆட்சியர் நகராட்சி ஆணையர் உறுதிபடுத்த வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் இதுவரை 82 சதவீதம் மேல் பொதுமக்களுக்கு முதல் தவனை  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுளளது. மேலும் 20.09.2021 முதல் அனைத்து வணிக வளாகங்கள் துணிக் கடைகள் நகைக் கடைகள் மற்றும் இதர துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் முதல் தவணைகொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடை உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது அனைத்து பொது மக்களின் கடமை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments