NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

AADHAAR CARD-அடிப்படையில் இணையம் மூலமாக புதிய சிம்கார்டு

தொலைத்தொடர்பு துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிதாக சிம்கார்டு வாங்க விரும்புவோர் சில்லறை விற்பனையாளர்கள் அறிந்து அதற்குத் தேவையான ஆவணங்கள் முகவரி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான E-KYC பயன்படுத்தி புதிய சிம் கார்டுகளை வழங்கும் நடைமுறையை அலைபேசி சேவை நிறுவனங்கள் செயல்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் புதிய சிம் கார்டுகளை வாங்க இணையவெளியில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலமாக வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சிம்கார்டு சேர்க்கப்படும் எனவும் , E-KYC சேவை மூலமாக வாடிக்கையாளர்களின் விவரங்களை உறுதிசெய்ய வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சிம் கார்டு வழங்க ஆதார் விவரங்களை பயன்படுத்த வேண்டியிருந்தால் அதற்கு வாடிக்கையாளிடம் அலைபேசி சேவை நிறுவனங்கள்  அனுமதி பெறுவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments