NEWS

6/recent/ticker-posts

WHATSAPP-ல் புதிய வசதி- அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் புதிய வசதி அறிமுகம். இதனைப் பற்றிய முழு விபரங்கள் பின்வருமாறு:
 

வாட்ஸ் அப்பில் மெசேஜ், புகைப்படம், டாக்குமெண்ட் ,வீடியோக்கள் அனுப்ப முடியும். வாட்ஸ் அப்பில் புகைப்படங்களை அனுப்பும்போது டேட்டாவை குறைப்பதற்காக கம்ப்ரஸ் செய்து அனுப்பப்படும். இதனால் புகைப்படங்களின் குவாலிட்டி குறைவாக இருக்கும்.புகைப்படம் அதிக தரத்துடன் அனுப்ப வேண்டுமென்றால் டாக்குமெண்ட் ஆக தான் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அனுப்பும் போது அவற்றின் பெயர் மட்டும் காட்டப்படும்.இந்த டாக்குமெண்ட் பைலை டவுன்லோட் செய்தால் மட்டுமே என்ன புகைப்படம் என்பது நமக்கு தெரியும். இதனை தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது இதனை தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம்  'preview' என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

இதன்மூலம் என்ன புகைப்படம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

Post a Comment

0 Comments