NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

ZOOM அப்ளிகேஷனில் புதிய வசதி-மாணவர்கள் அதிர்ச்சி

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவ மாணவிகள் ZOOM, GOOGLE MEET போன்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

ZOOM மற்றும் GOOGLE MEET நிறுவனங்கள் அப்ளிகேஷனில் புதிய மாற்றங்களையும் புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் ஜும் அப்ளிகேஷனில் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் பார்க்கும் வகையிலும் மாணவர்கள் ஆசிரியர்களை மட்டுமே பார்க்கும் வகையில் FOCUS MODE என்ற புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் மூலம் HOST மற்றும் ஆசிரியர்கள் அனுமதி கொடுக்கும் மற்றொரு co host ஆகியோர் அனைத்து வசதிகளையும் உபயோகிக்க முடியும். இந்த புதிய வசதியை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியாகவும் மாணவர்களுக்கு இந்த அப்டேட் கவலை கொடுக்கும் வகையிலும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய வசதியால் மாணவர்களின் கவனம் சிதறுவதற்கு வாய்ப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments