NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Whatsapp பயனாளர்கள்;அப்ளிகேஷன் பாதுகாப்பானது இல்லை என கருதினால் பயன்படுத்த வேண்டாம்- டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

மக்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை ஒன்றாகும்.வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியிட்டது .அதில் தனி நபர் தகவல் சேமிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதனால் சில வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் இருந்து வேறொரு அப்ளிகேஷனுக்கு மாறினார்.

பிரபல தகவல்பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் தனிநபர்களின் தகவல்களை அனுமதி இன்றியும் எடுத்துள்ளதாகவும், பரிமாறப்படும் மெசேஜ் ,ஆடியோ, வீடியோ க்களை உளவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டும் எழுந்தது இது தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மீறுவதாகவும் என வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வாட்ஸ்அப் மட்டுமல்ல பெரும்பாலான செயலிகள் தனிநபர் தகவல்களை சேகரிப்பதும் வாட்ஸ்அப் நிறுவனம் தகவல்களை சேகரிப்பது உளவு பார்க்கிறது என்று கருதுபவர்கள் தங்கள் மொபைலில் இருந்து வாட்ஸ்அப் அப்ளிகேஷனை நீக்கிவிடுங்கள் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


மேலும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்ப முடியாது என்று உத்தரவிட்டார்.மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி கூறுகையில் பிசினஸ் கணக்குகளின் பிரைவசி கொள்கைகள் மட்டும்தான் மாற்றப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட கணக்குகளில் வழக்கம்போல பரிமாறும் தகவல்கள் என்டு என் என்கிரிப்ட் தகவல்களாகவே உள்ளன என அவர் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments