இதனை தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக கடந்த வாரங்களில் இருந்து வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு "WhatsApp is updating its terms and privacy policy" என்ற நோட்டிபிகேஷன் ஆனால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இதன் விளைவால் வாட்ஸ் அப்பில் இருந்து பல பயனாளர்கள் மாற்று அப்ளிகேஷனில் சேர்ந்து வருகின்றனர். மக்களிடையே அதிக பயத்தை ஏற்படுத்தியுள்ள புதிய கொள்கைகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அந்த புதிய கொள்கைக்கு விளக்கம் அளித்து உள்ளது.
அவை பின்வருமாறு:
தனி நபரின் செல்போன் விவரங்கள் ,இருப்பிட முகவரி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது.
உங்களது மெசேஜ்கள் உங்கள் நண்பர்கள் குடும்பத்தினருடன் பேசும் அழைப்புகளையும் ஃபேஸ்புக் நிறுவனம் கண்காணிக்காது.
எந்த ஒரு விஷயம் பரிமாறப்பட்டாலும் அது உங்களுக்குள்ளானது மட்டுமே. அது உங்களுக்குள்ளேயே இருக்கும். End to end encryption என்ற முறையில் இருப்பதால் உங்கள் தகவல்கள் பரிமாற்றத்துக்குள் எவராலும் தலையிட முடியாது.
மேலும் இருப்பிடத் தகவல் நண்பர்களிடம் பகிரும் பொழுது அது பாதுகாப்பாகவே இருக்கும் என்றோம் நாம் அனுப்பிய நபரை தவிர வேறு யாருக்கும் இருப்பிடத் தகவல் செல்லாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது
மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் அக்கவுண்டில் உள்ள செல்போன் எண்களை ஃபேஸ்புக் உடன் பகிர மாட்டோம் மற்றும் குரூப் மெசேஜ்களும் பாதுகாப்பானதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் தகவல்களை விளம்பர நோக்கத்திற்காக பேஸ்புக்கிலும் கொடுக்க மாட்டோம் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் நாம் கோரிக்கை விடுத்தால் நமது வாட்ஸ்அப் விவரங்களை நமக்கு வாட்ஸ்அப் நிறுவனம் அனுப்பும் .அந்த தகவலை தேவையானால் நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம் அல்லது டெலிட் செய்து கொள்ளலாம் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk