NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Whatsapp புது விதிகளுக்கு சம்மதிக்காவிட்டால் வாட்ஸ்அப் வேலை செய்யாது; பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் அமல்

வாட்ஸ்-அப் செயலியில் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.


வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 4ஆம் தேதி தனியுரிமை கொள்கைகளை புதுப்பித்தது இதுகுறித்து தனது அறிவிப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு அனுப்பி உள்ளது .இந்த அறிவிப்பில் வாட்ஸ்அப் பயனர்கள் புதிய விதிமுறைகளை மற்றும் தனியுரிமைக் கொள்கையை தங்களது ஒப்புதலை வழங்க வேண்டுமெனவும் அவ்வாறு செய்யத் தவறினால் பயனாளர்களின் வாட்ஸ்அப் கணக்கை நீக்க வேண்டி இருக்கும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதனால் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு பின் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப் நிறுவன விதிமுறைகள் நிபந்தனைகள் அல்லது அம்சங்களை நீங்கள் மீறினால் அது நிறுவனத்துக்கோ பயனாளர்களுக்கோ ஆபத்து அல்லது சட்டரீதியான வெளிப்பாடுகளை ஏற்படுத்தினால் எங்கள் சேவைகளுக்கான உங்களது அணுகலை நாங்கள் மாற்றவோ தடை செய்யவோ அல்லது நிறுத்தவோ முடியும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.


வாட்ஸ்அப் கணக்கு நீண்ட காலத்திற்கு பயன்படுத்தாத நிலையில் இருந்தால் அந்த கணக்கு முடக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்றும் வாட்ஸ்-அப் செயலியில் உங்களது செயல்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் எனவும் இதில் உங்கள் செயல்பாடுகள் தொடர்புகளின் நேரம் கால அளவு முறைகள் பதிவுகள் கோப்புகள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments