NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

மத்திய அரசின் டிஜிட்டல் நாள்காட்டி மற்றும் டைரி வெளியீடு- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசின் டிஜிட்டல் நாள்காட்டி மற்றும் டைரியை மத்திய தகவல் மற்றும் ஒளலிபரப்புத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார். இந்த டிஜிட்டல் நாட்காட்டி மற்றும் டைரியை தேசிய ஊடக மையத்தில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த டிஜிட்டல் நாட்காட்டி மற்றும் டைரி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் இயங்கக்கூடிய அப்ளிகேஷன் ஆகும்.



இந்த நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் முன்பு சுவர்களை அலங்கரித்து அரசு நாட்காட்டிகள் தற்போது செல்போன்களை அலங்கரிக்கின்றன மகிழ்ச்சியும் தெரிவித்தார் இந்த செயலின் சிறப்பம்சங்கள் குறித்து பேசிய திரு பிரகாஷ் ஜவடேகர் இந்த கைபேசி செயலி இலவசம் என்றும் 2021 ஜனவரி 15ஆம் தேதி முதல் இதில் 11 மொழிகளில் இலவசமாக கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

டிஜிட்டல் நாட்காட்டி மற்றும் டைரி மூலமாக ஒவ்வொரு மாதத்திலும் ஒரு கருப்பொருள் ஒரு தகவல் பிரபல இந்திய தலைவர் பற்றிய விபரம் இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.மேலும் இதில் இதுவரை கொண்டுவரப்பட்ட அரசு திட்டங்கள் தொடங்கப்பட்ட தேதியும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.



இந்திய பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கு ஏற்ற வகையில் மத்திய அரசின் டிஜிட்டல் நாட்காட்டியை ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும் .இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம் வடிவமைத்து உருவாக்கி உள்ளது .தற்போது இந்த செயலி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. விரைவில் 11 இந்திய மொழிகளில் கிடைக்கும்.







Post a Comment

0 Comments