NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

இந்திய தபால் துறை வங்கியின் புதிய செயலி -Dakpay Application

தபால் துறை மற்றும் இந்திய தபால் துறை வங்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த DAKPAY என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


DAK PAY அப்ளிகேஷன் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை மட்டும் வழங்கவில்லை. நாடு முழுவதும் உள்ள தபால் துறை நெட்வொர்க் மூலம் இந்திய தபால் வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் இந்திய தபால் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்.மேலும் இதன் சிறப்பு அம்சமான விற்பனை நிலையங்களில் QR CODE குறியீட்டை ஸ்கேன் செய்து வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. மேலும் இதர கட்டணங்களை செலுத்தும் வசதியும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.



இந்த DAKPAY செயலியை மத்திய தகவல் தொடர்பு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


மேலும் இந்த புதிய செயலியை பற்றி அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் தொடக்க காலத்தில் இந்திய தபால் துறை மக்களுக்கு நேரடியாகவும், டிஜிட்டல் மூலமாகவும் பல சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது DAKPAY தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் காவல்துறை சேவைகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைகிறது. இந்த புதுமையான சேவை வங்கி சேவைகளை மட்டுமல்ல ஆன்லைன் தபால் சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் ஒருவர் வீட்டில் இருந்து தபால் சேவைகளை ஆர்டர் செய்ய முடியும். நிதி சேவைகளையும் பெற முடியும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல் வீட்டிலேயே நிதி சேவைகளை பெறுதல் என்ற பல சேவைகள் மூலம் பிரதமரின் தொலைநோக்கி உள்ளடக்கம் மற்றும் தற்சார்பு இந்தியா நோக்கி தபால் துறை முன்னேறி உள்ளது என்று அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments