தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டானில் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ரூ.32.50 கோடி செலவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.12.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டானில் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 32.50 கோடி ரூபாய் செலவில் 63,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார். மேலும், இம்மினி டைடல் பூங்காவில் Protogrowth Inc மற்றும் Pro1 Health Systems ஆகிய நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.
இந்தியாவிலேயே, மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருவதோடு, நாட்டிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் திகழ்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பூங்கா அமைத்தது தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட அடித்தளமாக அமைந்தது. இவ்வரசு பொறுப்பேற்றவுடன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மாநிலம் முழுவதும் பரவலாக அமைவதை உறுதி செய்திட, முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு- செலவுத்திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
திறந்து வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள்
குறித்த விவரங்கள்
விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் 31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்கா 17.2.2024 அன்றும், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் செலவிலும், சேலம் மாவட்டம், கருப்பூர் கிராமம், ஆணைக்கவுண்டன்பட்டியில் 29.50 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள் 23.9.2024 அன்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டன. மேலும், வேலூர் மாவட்டம், மேல்மொனவூர்- அப்துல்லாபுரத்தில் 30 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும், திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையத்தில் 44 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 24.06.2022 அன்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். அதன் கட்டுமானப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி, மினி டைடல் பூங்கா திறந்து வைத்தல்
தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான்-II பகுதியில் 4.16 ஏக்கர் நிலப்பரப்பளவில் 32 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 63,000 சதுர அடி பரப்பளவில் அடித்தளம் மற்றும் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா கட்டுவதற்கு 19.05.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இப்பணியானது மிகக் குறுகிய காலத்திலேயே நிறைவடைந்து அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மினி டைடல் பூங்கா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடத்தில் குத்தகைக்கு விடப்படக்கூடிய பகுதியான 50,937 சதுர அடி முழுவதும் நிறுவனங்களுக்கு திறந்து வைக்கப்பட்ட இன்றைய தினமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தகவல் தொழில்நுட்ப துறையில் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் அதிக வேலைவாய்ப்பு பெறுவதுடன், அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூகநலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி. கீதாஜீவன், மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வி. மார்க்கண்டேயன், திரு. சி. சண்முகய்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. பி. ஜெகன், தலைமைச் செயலாளர் திரு நா.முருகானந்தம், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் திரு. வி. அருண் ராய், இ.ஆ.ப., டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு. எல். மதுபாலன், இ.ஆ.ப.,
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மினி டைடல் பூங்காவை திறந்து வைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு
தென் தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்காவாக அமைந்துள்ள தூத்துக்குடி டைடல் பூங்கா அப்பகுதியில் வாய்ப்புகளுக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்து, இளம் திறனாளர்களுக்குப் புதிய வாசலைத் திறந்து விட்டுள்ளது. பட்டாபிராமில் திறந்து வைக்கப்பட்ட டைடல் பூங்கா, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மற்றும் தூத்துகுடியில் திறந்து வைக்கப்பட்டுள்ள நியோ டைடல் பூங்காக்களினால் தமிழ்நாட்டின் வளர்ச்சிச் சரிதம் பல்கிப் பெருகிறது.
நமது திராவிட மாடல் ஆட்சியில் மாநிலமெங்கும் தொடங்கப்பட்டுள்ள டைடல் பூங்காக்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது. வேலூர், திருப்பூர், காரைக்குடி என அடுத்து தொடங்கப்படவுள்ள டைடல் பூங்காக்கள் மேலும் வாய்ப்புகளை விரிவடையச் செய்யும்!
The first TIDEL Park in South Tamil Nadu, at Thoothukudi, marks a new chapter of opportunity, creating a pathway for young talent.
With the Pattabiram TIDEL Park and TIDEL Neo projects in Villupuram, Thanjavur, Salem, and Thoothukudi, Tamil Nadu's growth story continues. TIDEL Parks across the state are generating thousands of jobs, driving inclusive and equitable progress under the Dravidian Model.
Upcoming TIDEL Parks in Vellore, Tiruppur, and Karaikudi will further expand these opportunities.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk