நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்காக புதிய அறிவியல் ஆய்வகங்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 2024-2025ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அரசுப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை ஏற்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டோம்.
அதனை செயல்படுத்தும் விதமாக 175 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.57.8064 கோடி மதிப்பீட்டில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்களை ஏற்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டிற்காக தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசாணை:
2024-25-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அறிவிப்பு எண்.1 பள்ளிகளில் அரசுப் ஆய்வகங்களைத் தரம் உயர்த்துதல் உயர்தொழில்நுட்ப
அரசுப் பள்ளி மாணவர்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறைப் பயிற்சியின் மூலம் கற்றுத் தேர்வதற்கு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பவளர்ச்சிக்கேற்ப படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக 2024-25-ஆம் கல்வியாண்டில் 1000 மாணவர்களுக்கு மேல் பயின்றுவரும் அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
2. மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முன் முயற்சிகள் (ICT & DI) கூறுகளின் கீழ் 3090 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 2939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் 60:40 என்ற விகிதத்தில் ஐந்து ஆண்டுகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவ ரூ.520,13,04,447/-க்கு திருத்திய நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
3. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில், மேற்காண் அரசாணையின்படி இவ்வாய்வகங்களில் ஒரு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு முறையே 10 கணினி மற்றும் 20 கணினிகளுடன் இணையதள சேவையகம் (server) உள்ளிட்ட ஏனைய இதர உபகரணங்களும் வழங்கப்பட்டன. இவ்வகையில் மொத்தம் 89,680 கணினிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இக்கணினிகள் மையக் கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மேல்நிலைக் கல்வியில் கணினிப் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாறிவரும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, மாணவர்கள் முழுமையான கற்றல் அனுபவத்தை பெறுவதற்கும். நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு அடிப்படையிலான நுட்பங்கள் மூலம் மாணவர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்துவதற்கும், நவீன கணினி மொழியில் மாணவர்கள் செய்து கற்றல் மூலம் நேரிடை அனுபவங்களைப் பெறுவதற்கும், தற்போதுள்ள பயன்பாட்டில் உள்ள கணினி அறிவியல் ஆய்வகங்களை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் எண்ணிக்கையிலான கணினிகளுடன் கூடிய நவீன கணினி அறிவியல் ஆய்வகங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. அதன்படி, கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவுகள் உள்ள 2,903 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடப்பிரிவுகளில் உள்ள 2,82,021மாணவர்களது எண்ணிக்கைக்கேற்ப 5 மாணவர்களுக்கு ஒரு கணினி என்ற கணக்கில் 56,422 கணினி எண்ணிக்கையுடன் மூன்று கட்டமாக பின்வரும் உபகரணங்களுடன் கூடிய புதிய நவீன கணினி அறிவியல் ஆய்வகத்தினை உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk