NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

ZOOM அப்ளிகேஷனின் கட்டுப்பாடுகள் நீக்கம்

கொரோனா நோயின் காரணமாக அனைத்து மக்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கும் GOOGLE MEET , ZOOM போன்ற பல்வேறு அப்ளிகேசன்கள் பயனுள்ளதாக உள்ளன. 

வீடியோ கான்பரன்ஸ் வசதி தரும் இந்த அப்ளிகேஷன்கள் இலவச சேவை மற்றும் கட்டணம்  சேவை என்று இரண்டு முறையில் வழங்குகிறது.


Zoom அப்ளிகேஷனில் அதிகபட்சம் 40 நிமிடங்கள் வரை வீடியோ கான்பரன்சில் ஈடுபடமுடியும் என சமீபத்தில் zoom நிறுவனம் அறிவித்திருந்தது.அதன்படி இப்பொழுது அப்ளிகேசனில் 40 நிமிடங்கள் வரை வீடியோ கான்பரன்சில் கலந்து கொள்ள முடியும். அதற்கு மேல் தொடர வேண்டுமென்றால் கட்டண சேவையை ஜூம் அப்ளிகேஷன் நிறுவனம் வழங்கிவருகிறது.


இந்த சூழ்நிலையில் கட்டுப்பாட்டினை நீக்க உள்ளதாக ஜூம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி வரும் நவம்பர் மாதம் 26ஆம் தேதி நள்ளிரவில் இருந்து 27 ஆம் தேதி காலை 6 மணி வரை கட்டுப்பாடு நீக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த இடைப்பட்ட நேரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இலவசமாக வீடியோ கான்பரன்சில் ஈடுபடமுடியும்.

இச்சலுகை பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் காணப்பட்ட நிலையிலும் தொடர்ந்து இணைந்திருக்கும் வாடிக்கையாளர்காக இந்த சலுகை வழங்கப்படுவதாக Zoom நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments