NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

தீபாவளியை முன்னிட்டு மஸ்லின் துணியாலான முகக்கவசம்; காதி அறிமுகம்

 தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு மஸ்லின் துணியால் ஆன புதிய முக க்கவசங்களை காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

பண்டிகை உற்சாகத்தை அலங்கரிக்கும் வகையில் இந்த தீபாவளிக்கு காதி நிறுவனம் பனி வெள்ளை மற்றும் பிரகாசமான சிவப்பு நிறத்தின் கவர்ச்சிகரமான கலவையில் புதிய முகக்கவசங்களைக் கொண்டு வந்துள்ளதுதீபாவளிப் பண்டிகையைக் கருத்தில் கொண்டு காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் தொடங்கி உள்ள வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான ‘தீபாவளி வாழ்த்துகள்’ என்று அச்சிடப்பட்ட இரட்டை அடுக்கு முகக்கவசங்கள் தூய மஸ்லின் துணியில் உருவாக்கப்பட்டுள்ளனமேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாரம்பர்ய காதி கலைஞர்களால் உயர் தரமான கைத்தறியால் உருவான அதி நவீன பருத்தி துணியால் உருவாக்கப்பட்டுள்ளது

இது தவிரவரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு முகக்கவசங்களையும் காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையம் தொடங்க உள்ளது.

இரட்டை அடுக்கு காதி காட்டன் மற்றும் மூன்றடுக்கு பட்டு முக க்கவசங்களுக்கு கிடைத்த பொதுமக்களின் வரவேற்பை அடுத்தே மஸ்லின் துணியால் ஆன முகக்கவசங்கள் கொண்டு வரப்பட்டனஆறு மாத காலகட்டத்துக்குள் நாடு முழுவதும் இது போன்ற 18 லட்சம் முக க்கவசங்களை காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையம் விற்பனை செய்துள்ளது.

தீபாவளி மஸ்லின் முகக்கவசங்கள் தலா ஒவ்வொன்றும் ரூ.75 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுஇந்த முகக்கவசங்கள் தில்லியில் காதி நிறுவனங்களின் கடைகளிலும் ஆன்லைன் வாயிலாக காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையத்தின் -தளமான; www.khadiindia.gov.in. என்ற இணையதளத்திலும் கிடைக்கும்.

Post a Comment

0 Comments