1.தேர்வர்கள் கீழே குறிப்பிட்டுள்ள வரவேண்டிய நேரத்திற்கு முன்பே தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும். வருகை அனுமதிக்கப்படும் நேரத்திற்கு பிறகு வரும் தேர்வர் எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார். தேர்வர், தேர்வறையில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே அமர வேண்டும்.
தேர்வு அறைக்கு வரவேண்டிய நேரம்: 8.30 காலை
வருகை அனுமதிக்கப்படும் நேரம்: 9.00 மு.ப வரை- காலை
தேர்வு தொடங்கும் நேரம்-9.30 காலை
2.தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச்சீட்டுடன் (Hall Ticket) தேர்வு நடைபெறும் தேர்வுக்கூடத்திற்கு வர வேண்டும். தேர்வர் தங்களுடைய ஆதார் அட்டை /கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலைக் கொண்டு வர வேண்டும்.
3. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், புகைப்படம் அச்சிடப்படவில்லை தெளிவாக இல்லை அல்லது தோற்றத்துடன் பொருந்தவில்லை தேர்வரின் அல்லது தேர்வரின் என்றால், தேர்வர் தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, முறையாகக் கையொப்பமிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின் ஒளிநகல் மற்றும் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை இணைத்து, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டையின் அசலினை அறைக் கண்காணிப்பாளரிடம் காண்பிக்க வேண்டும்.
4. தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். OMR விடைத்தாள் உபயோகிக்கும் முறை குறித்து அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை கண்டிப்பாகப் பின்பற்றிட வேண்டும்.
5. தேர்வாணைய அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் உள்ளிட்ட மின்னனுசாதனங்கள் மற்றும் இதர தடைசெய்யப்பட்ட பொருட்களை தேர்வர்கள் தேர்வுகூடத்திற்கு கொண்டுவர அனுமதியில்லை. தவறினால், அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படுவதுடன் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும், மேலும், தேர்வு எதிர்காலத்தில் எழுதுவதிலிருந்து விலக்கிவைக்கப்படுவர். ஆள்மாறாட்டம் உட்பட எந்த விதமான தேர்வு முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
6. தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக வழங்கப்படும். வினாத்தொகுப்பு OMR எண்ணை வினாத்தொகுப்பு கருமையாக்குவதற்கு முன், தேர்வர்களுக்கு விடைத்தாளில் எழுதி அனைத்து வினாக்களும் வினாத்தொகுப்பில் எவ்வித விடுதல்களுமின்றி அச்சிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் குறைபாடு இருப்பின் அறைக்கண்காணிப்பாளரிடம் தெரிவித்து மாற்று வினாத்தொகுப்பினைக் கேட்டுப் பெறவும்.
7. தேர்வு நேரம் முடிவதற்கு முன்பாக தேர்வர், தேர்வறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.
8. இந்த தேர்வுக்கூட வழங்கப்படுவதால் அனுமதிச் சீட்டு மட்டுமே இந்த பணிநியமனத்திற்குத் தகுதி பெறுவதற்கான எந்த உரிமையும் தங்களுக்கு கருதக்கூடாது.
குறைதீர் அழைப்பு மைய கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 419 0958
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk