மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் உறுதி செய்திருக்கிறது.
ஜூலை மாதம் பிறந்தது முதலே, மொஹரம் பண்டிகை குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகி வந்தது. ஆனால், மொஹரம் பண்டிகை ஜூலை 6ஆம் தேதி என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், மொஹரமை முன்னிட்டு ஜூலை 7 அன்று அரசு விடுமுறை என்று பரவும் தகவல் வதந்தி. ஹரமை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான தகவலாகும்.
"கடந்த 26-06-2025 அன்று மொஹரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-06-2025 தேதி அன்று மொஹரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை 06-07-2025 ஆகும்." என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 07-07-2025 திங்கட்கிழமை அரசு விடுமுறை இல்லை. எனவே தவறான தகவலை பரப்பாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk