11,12, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வாய்ப்பு-10000 ரூபாய் பரிசு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023-2024ஆம் ஆண்டிற்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் 11, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.தமிழ் வளர்ச்சித் துறையின் 2023-2024ஆம் ஆண்டிற்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் 11, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நடத்தி பரிசு காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
10000 ரூபாய் பரிசு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 09.01.2024 அன்று 11,12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி தியாகதுருகம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 10.01.2024 அன்று கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி உளுந்தூர்பேட்டை ஜவகர்லால் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ.7,000/-, மூன்றாம் பரிசாக ரூ.5,000/- பரிசுத் தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மேலும், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்குபெறுவதற்கான விண்ணப்பத்தினை 97869 66833 என்ற எண் அல்லது tamildevelopmentvpm@gmail.com அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரியினைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள்இம்மூன்று போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk