UPI மூலமாக 90 முறைக்கு மேல் கட்டணம் செலுத்தினால் வரி என வங்கிகள் அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும் மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலும் என ஆறு மாதங்களாக பிரித்து 6 மாதங்களில் நீங்கள் எவ்வளவு முறை PAYTM AMAZON PAY GOOGLE PAY போன்ற அப்ளிகேஷன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர் என்பதை கணக்கிடுவார்கள்.
6 மாதத்தில் நீங்கள் எவ்வளவு முறை Amazon pay, phone pe,Google pay, Paytmபோன்ற Application மூலம் பணம் செலுத்தி உள்ளீர்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் 6 மாதத்தில் 90 முறைக்கு மேல் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி இருந்தால், 91வது முறையில் இருந்து, கட்டணமாக, ரூ.2.25 மற்றும் ஜி.எஸ்.டி.வரி பிடிக்கிறார்கள். இது எல்லாம் வங்கிகளிலும் கிடையாது.
உங்கள் வங்கி இந்த துறை சார்ந்த வரியை வசூலிக்கிறார்களா என்பதை உறுதி செய்து நீங்கள் இந்த வரியை செலுத்த வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
0 Comments