NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

UPI APP - மூலமாக எவ்வளவு பணம் அனுப்ப முடியும்- Google pay, phone pe, Amazon pay, Patyam

 UPI மூலமாக ஒருவர் எவ்வளவு பணம் அனுப்ப முடியும் என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

UPI APP மூலம் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை  பணம் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால், இந்த அதிகபட்ச வரம்பு வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக,  கனரா வங்கியில் நாள்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பணம் பரிமாற்ற செய்ய முடியும். இதேபோன்று எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 1 லட்சம் ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம்.


GOOGLE PAY:

கூகுள் நிறுவனத்தின் GOOGLE PAY அல்லது GPay வழியே நாள்தோறும் 1 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப முடியும். ஆனால் 10 பரிவத்தனைகள் மட்டுமே செய்ய முடியும். 

2,000 ரூபாய் வரை பணம் பெறுவதற்கான கோரிக்கை வைக்க முடியும். 


Phone pe:

Phone pe மூலமாக நாள்தோறும் 1 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம். வங்கிகளைப் பொறுத்து 10 முதல் 20 பரிவர்த்தனைகள் செய்ய முடியும். 2,000 ரூபாய் வரை பணம் பெறுவதற்கான கோரிக்கை வைக்க முடியும். 

Paytm App:
Paytm -ல் நாள்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம். ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரம் வரை செய்யலாம். ஒரு மணிநேரத்திற்கு 5 பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடியும். அதிகபட்சம் 20 பரிவர்த்தனைகள் செய்யலாம். 


Amazon pay:

Amazon pay மூலமாக நாள்தோறும் 1 லட்சம் ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்ய முடியும். முதல் 24 மணிநேரத்தில் 5 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும். 20  பரிவர்த்தனை தினமும் அனுப்பலாம்.




Post a Comment

0 Comments