NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

BREAKING NEWS: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு- என்னென்ன கட்டுபாடுகள் , தளர்வுகள்- முழு விவரங்கள்

தமிழ்நாட்டில், கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 01.12.2021-ன்படி, 15.12.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும். தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 13.12.2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. -

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 30.11.2021 நாளிட்ட அறிவிக்கையின்படி, கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா - ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும். பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் என்னென்ன கட்டுப்பாடுகள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


Post a Comment

0 Comments