NEWS

6/recent/ticker-posts

ATM CARD-வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு-அறிவிப்பு

ATM CARD (debit card) படங்களில் வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:

வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க ரிசர்வு வங்கி தடை விதித்துள்ள தடையை ஜனவரி 1-2022ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதனை தொடர்ந்து டெபிட் கார்டை பயன்படுத்தி அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக இருந்தால் இனி ஒவ்வொரு முறையும் ஏடிஎம் கார்ட் விபரங்களை பதிவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.



பொதுவாக பயனாளர்கள் ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது அவர்களின் டெபிட் கார்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும். எனவே மறுமுறையும் ஷாப்பிங் செய்யும்போது மூன்று இலக்க CVV எண்களை மட்டும் பதிவிட்டு கட்டணம் செலுத்துவோம். ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதால் இனி ஒவ்வொரு முறையும் ஷாப்பிங் செய்யும் பொழுத
 18 இலக்க எண்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் நோக்கில் கார்டு விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க
 தடை விதித்துள்ளன.

Post a Comment

0 Comments