NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

அஞ்சல் அலுவலகங்களில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு கவுன்டர் - அஞ்சல் துறை

தபால் வங்கி நடவடிக்கைகளுக்காக, முக்கிய ராணுவ தளங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில்,  பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு கவுன்டர் வசதியை ஏற்படுத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

இதில் சென்னை வட்டார தலைமை தபால் அலுவலகத்தில், பாதுகாப்பு படையினருக்கு, பிரத்தியேக தபால் வங்கி சேவைகளை வழங்க சிறப்பு கவுன்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கவுன்டர் 28.01.2021ம் தேதி முதல் செயல்படுகிறது.  இது பாதுகாப்பு படையினர் பண பரிமாற்றத்தை சுமுகமாக மேற்கொள்ளத் தேவையான வசதியை அளிக்கும். இந்த வசதியை சம்பந்தப்பட்ட அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வட்டார தலைமை அஞ்சல் அலுவலகத்தின், தலைமை அஞ்சல் அதிகாரி  இதைப்பற்றி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments