மத்திய அரசின் விவசாய நிதி உதவி திட்டத்தின் ஏழாவது தவணைப் பணம் டிசம்பர் 1ஆம் தேதி ( இன்று) முதல் பயனாளிகளுக்கு அனுப்பப்படும் என்று மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது.எனவே இந்த ஏழாவது தவணை பணத்தை நீங்கள் பெறுவதற்கு முன் ஆறாவது தவணைக்கான பணம் உங்கள் அக்கவுண்டில் ஏறவில்லை என்றால் அதில் என்ன தவறு நடந்து உள்ளது. என்பதை கண்டு பிடித்து அதை சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இந்த ஏழாவது தவணை பணமும் உங்கள் அக்கவுண்டிற்கு வந்து சேராது.
எனவே இந்த நிதி உதவி உங்கள் கணக்குக்கு வந்து விட்டதா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கான வழிகள் பின்வருமாறு:
1) முதல் செயல்முறை pmkishan என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2) அந்த இணையதளத்தில் farmer corner என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Beneficiary status ஏன்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
3) இதை ஓபன் செய்தவுடன் புதிய திரை தோன்றும் அதில் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் Account நம்பர் போன்ற விபரங்கள் தோன்றும்.
4) அதில் ஏதாவது ஒன்றை நிரப்ப வேண்டும். நிரப்பிய பிறகு Get data என்ற button இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
5) அடுத்ததாக ஒரு புதிய திரை தோன்றும் . அதே உங்கள் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் விவசாய திட்டத்தின் கீழ் எப்போதெல்லாம் பணம் வந்து சேர்ந்துள்ளது என்ற Details கொடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் FTO is generated and payment confirmation is pending என தோன்றினால் உங்களது பணம் உங்கள் கணக்கிற்கு டெபாசிட் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதி உள்ளவர்களுக்கு பணம் வந்து சேரவில்லை என்றால் அரசின் ஹெல்ப்லைன் எண்களுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அதேபோல் மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
Helpline Number:
18001155266
011-23381092, 23382401
011-24300606
0120-6025109
மின்னஞ்சல் முகவரி: pmkisan-ict@gov.in
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk