NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Google pay அப்ளிகேஷன் மூலமாக பணம் அனுப்பினால் கட்டணமா?

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு Google pay, Phone pe போன்ற அப்ளிகேஷனை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் கூகுள் பே அப்ளிகேஷன் மூலமாக பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று செய்தி வெளியானது.அதாவது ஜனவரி மாதம் முதல் இணைய செயலி சேவை ரத்து செய்யப்படுவதாகவும் மொபைல் அப்பிளிகேஷன் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தகவல் பரவியது.ஆனால் இந்த தகவலை கூகுள் நிறுவனம்  தவறானது என மறுத்துள்ளது.


இந்தியாவில் உள்ள மக்களுக்கு கூகுள் பே மூலமாக பணம் அனுப்பினால் வழக்கம்போல கட்டணம் எதுவும் வசூலிக்கபடாது என்றும் கூகுள் நிறுவனம் தெளிவாக விளக்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த கட்டணம் பொருந்தும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் பே நிறுவனம் சமீபத்தில் புதிய வடிவிலான செயலியை முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்திருந்தது. அந்த அப்ளிகேஷன் பயன்பாட்டுக்கு வந்த பிறகு Google pay  வசதியை ஆன்லைன் தளத்தில் பயன்படுத்த முடியாது என்றும் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் iso தளங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் கூகுள் பே அப்ளிகேஷனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்றும் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அல்ல என்றும் கூகுள் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments