NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றும் புதிய வசதி- அப்டேட் செய்வதற்கான வழிமுறைகள்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து 1 வயது முடிந்த பிறகும் ஆதார் எண்ணிற்கு பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்த ஆதார் கார்டை பால் ஆதார் என அழைக்கப்படும். மேலும் ஆதார் எண்களை உன் பேங்க் அக்கவுண்ட்உடன் மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


ஆதார் கார்டில் பயனாளர்களின்  பெயர், வீட்டு முகவரி ,பிறந்த தேதி ,மாதம், வருடம் ,போன்றவைகள் தவறாக இருந்தாலோ அல்லது புதுப்பிக்க நினைத்தாலோ அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.மேலும் தற்போது ஆதார் உள்ள மொபைல் என்னை மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் https://ask.uidai.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். பிறகு  GET OTP என்ற பட்டனை கிளிக் செய்து OTP பெற வேண்டும்.பின்பு ஓடிபி எண்களை பதிவிட்டு ஆதார் அப்டேட் என்பதை கிளிக் செய்து மொபைல் என்னை மாற்றிக் கொள்ளலாம்.மேலும் தங்கள் மொபைல் எண்ணை ஆதரவுடன் இணைக்க விரும்பினால் அதை தேர்வு செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.பின்பு விவரங்களை சரிபார்த்து சேமிக்க வேண்டும்.  இதனை தொடர்ந்து நீங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி மாற்றிய புதிய ஆதார் காரடை பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments