அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு Teacher Eligibility Test என்ற தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் மேலும் ஒரு தேர்வான நியமன தேர்விற்கு தயாராக வேண்டிய நிலை உள்ளது.
இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமன தேர்விற்காக தயாராகி வருகின்றனர். மேலும் நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஒருபுறம் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட விழாவில் பங்கு பெற்ற போது நியமனத் தேர்வு பற்றிய கருத்தை வெளியிட்டுள்ளார். அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களையும் விரைவில் நிரப்பப்படும் எனவும், மேலும் நியமனத் தேர்வு ரத்து செய்வது குறித்து மேலிடத்தில் கலந்தோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk