NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Breaking News: Pink வாட்ஸ்அப் என்ற பெயரில் பரவும் வைரஸ்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் வாட்ஸ் அப்பும் ஒன்றாகும். வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் தற்போது வேகமாக பரவி வரும் பிங்க் வாட்ஸ்அப் என்ற வைரஸால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்தப் pink வாட்ஸ் அப் லிங்கை திறந்தவுடன் வாட்ஸ்அப் பயனாளர்கள் உள்ள அனைத்து குழுக்களுக்கும் வேகமாக பரவி அந்த வாட்ஸ் அப் குழுக்களில் உள்ள 200க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் அந்த லிங்கை ஒருவர் தொட்டாலே மீண்டும் அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் வேகமாகப் பரவுவதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே இதுபோன்ற லிங்கை யாரும் தொட்டு திறக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் மேலும் இந்த லிங்கை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த pink வாட்ஸ்அப் லிங்குகள் செல்போனில் உள்ள தரவுகளை திருடுவதற்காக இணையத் திருடர்களால் உருவாக்கப்படும். இதுபோன்ற செயல்களைத் ஆசைவார்த்தைகள் சேர்த்து சமூக ஊடங்களில் பரப்புகின்றனர். இதை அறியாமல் தரவிறக்கம் செய்யும் பட்சத்தில் நமது செல்போன்களில் உள்ள புகைப்படங்கள் வீடியோக்கள் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்கள் திருடு போக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments